சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காட்டில் இந்து முன்னணி ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
மண்டைக்காட்டில் இந்து முன்னணி ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
18-06-2015
திருவாரூர் மாவட்ட இந்து முன்னணி முன்னாள் தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார். அவர் மரணம் அடைந்து ஓர் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி இந்து முன்னணி சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் மண்டைக்காடு கோவில் முன்பு இருந்து மவுன ஊர்வலம் இன்று காலை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை முதல் அந்த பகுதியில் இந்து முன்னணி தொண்டர்கள் திரள தொடங்கினார்கள். இந்த தகவல் கிடைத்ததும். மண்டைக்காடு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஊர்வலம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்படாததால் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று கூறினார்கள். இதனால் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
அதன்பிறகு இந்து முன்னணியினர் மவுன ஊர்வலத்தை கைவிட்டு விட்டு அஞ்சலி நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பகுதியில் இந்து முன்னணி கொடி ஏற்றி சுரேஷ்குமார் உருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜா, பொது செயலாளர் கிருஷ்ணதாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் செல்லன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments: