District News
‘நவீன நகரங்கள்’ திட்டத்தில் நாகர்கோவிலை சேர்க்க வலியுறுத்தப்படும்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
‘நவீன நகரங்கள்’ திட்டத்தில் நாகர்கோவிலை சேர்க்க வலியுறுத்தப்படும்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
28-06-2015
குமரி மாவட்டத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின்பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக அவர் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- இந்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி ஜூலை போராட்டத்தை நான் முன்னின்று நடத்தினேன். இதுதொடர்பாக தற்போது மத்திய மனிதவளத்துறை மந்திரி மற்றும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரசாரும், கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டம் நடத்துகிறார்கள். இதைப்பார்த்து நான் அச்சப்படவில்லை. அதை நான் வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் அந்த கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இதற்காக குரல் எழுப்ப வேண்டும். இரட்டை வேடம் போடக்கூடாது. இந்த விஷயத்தை அரசியல் ஆக்க நினைக்கக்கூடாது. குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைய வாய்ப்பு உள்ளது. அதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த ‘நவீன நகரங்கள்‘ (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக நாகர்கோவில் விடுபட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்க்க நான் வலியுறுத்துவேன். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
0 Comments: