
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
மண்டைக்காடு தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
04-06-2015
மண்டைக்காடு பேரூர் தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூர் அவைத்தலைவர் செல்லப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எஸ்.பி.சந்திரா முன்னிலை வகித்தார். செயலாளர் ஜஸ்டின் மோகனதாஸ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் சிறப்புரையாற்றினார்.
முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், ஒன்றிய செயலாளர் குட்டிராஜன், சிவராஜ், சேக்தாவூத், அருள்ராஜ், ஜோஸ் மால்டியூஸ் உள்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் சுருளிஸ் நன்றி கூறினார்.

0 Comments: