Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி குழிவிளை பகுதியை சேர்ந்தவர் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி குழிவிளை பகுதியை சேர்ந்தவர் மரணம்
04-06-2015
மணவாளக்குறிச்சி குழிவிளை பகுதியை சேர்ந்தவர் சரபுதீன் (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணவாளக்குறிச்சியில் வாடகை கார் ஒட்டி வந்தார். பின்னர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்ததாக தெரிகிறது.
இன்று அதிகாலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தெரிகிறது. அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி மையவாடியில் வைத்து நடைபெறுகிறது. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
0 Comments: