
District News
சவுதி அரேபியாவில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக்கொலை
சவுதி அரேபியாவில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக்கொலை
01-06-2015
குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த பொழிக்கரை மீனவ கிராமம் மண்டபத்தெருவைச் சேர்ந்தவர் சிலுவை. இவருடைய மகன் மதிவளன் (வயது 45), இவர் சவுதி அரேபியாவில் மீன்பிடி வேலைக்கு சென்றார்.
சவுதி அரேபியாவில் உள்ள ஜூபைல் துறைமுகத்தில் இருந்து அவரது மைத்துனர் வில்சன் மற்றும் குமரிமாவட்டத்தை சேர்ந்த சகாய ஜான்சன், ராஜன், பாஸ்கர், சேவியர், செல்வம், ஜான் ஆகிய 8 பேரும் கடந்த இருதினங்களுக்கு முன்பு காலை ‘சுபேல் சர்க்கி’ என்ற நவீன விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அந்த விசைப்படகை மதிவளன் ஓட்டிச்சென்றார். இந்திய நேரப்படி இரவு 8.30 மணியளவில் அவர்கள் ஆழ்கடலில் சென்றபோது அவர்களது படகை மற்றொரு படகு நெருங்கி வந்தது.
அந்த படகில் இருந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் போல இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குமரி மாவட்ட மீனவர்கள் சென்ற படகை நிறுத்துமாறு கூறினர். பிறகு திடீரென கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் குமரி மீனவர்கள் படகு மீது சரமாரியாக சுட்டனர். இதில் மதிவளனின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.

0 Comments: