குமரிமாவட்ட செய்திகள்
குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் பொறுப்பேற்பு
குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் பொறுப்பேற்பு
29-05-2015
குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி திருவிதாங்கோட்டில் ஜமாத் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் வக்கீல் உதுமான் மைதீன் தலைமை தாங்கினார். தலைவராக இரவிபுதூர்கடையைச் சேர்ந்த அப்துல் லத்தீப், செயலாளராக நம்பாளியைச் சேர்ந்த எம்.ஏ.கான், பொருளாளராக இளங்கடையைச்சேர்ந்த பாவலர் சித்திக், துணைத்தலைவர்களாக வக்பு வாரிய தலைவர் தமிழ் மகன் உசேன், தேங்காப்பட்டணம் ஜமாத் ஆர்.எம்.எஸ். காதர், திருவிதாங்கோடு ஜமாத் முகமது ஹனீபா, கோட்டார் ஜமாத் அப்துல் கபூர், திட்டுவிளை ஜமாத் மைதீன்பிள்ளை, துணைச் செயலாளராக களியக்காவிளை ஜமாத் எம்.பி.கே. நாஸர், குலசேகரம் ஜமாத் பீருக்கண், வடக்கு சூரங்குடி ஜமாத் ஜி.எம்.எஸ். சபீக், மக்காயிப்பாளையம் ஜமாத் அலி அக்பர், மணவாளக்குறிச்சி ஜமாத் முகமது பஷீர் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
பொறுப்பேற்றவர்களுக்கு தேர்தல் ஆணையாளர் வக்கீல் உதுமான், இணை ஆணையர்கள் வக்கீல்கள் நாஸர், சலீம், துணை ஆணையாளர்கள் அக்ரி நிஜாமுதீன், முகமது சியாது, ஜலாலுதீன், பாரூக் ஆகியோர் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர். மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் அபூசாலிஹ் ஆலிம், தொழில் அதிபர் ஷாஜஹான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிர்வாகிகள் ஏற்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் வருடந்தோறும் 5 ஏழை இஸ்லாமிய மாணவ–மாணவியரின் கல்விச் செலவு மருத்துவ உதவி, திருமணஉதவி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு ஜமாத்துகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





0 Comments: