சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிச்சந்தை அருகே மணல் வியாபாரி குளத்தில் மூழ்கி சாவு
வெள்ளிச்சந்தை அருகே மணல் வியாபாரி குளத்தில் மூழ்கி சாவு
29-05-2015
சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் சிவராஜன்(வயது 35). மணல் வியாபாரி. இவர் வெள்ளிச்சந்தை மணவிளையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். நேற்று மதியம் அவர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கண்ணமங்கலம் குளத்தில் குளிக்க உறவினர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சென்றார். குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அப்போது குளத்தில் யாரும் இல்லாததால் இதனை யாரும் கவனிக்க வில்லை.
நேற்று மாலையில் அப்பகுதி இளைஞர்கள் குளத்தில் குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருக்கும் போது குளத்துக்கு அடியில் அவர்களது காலில் சிவராஜன் உடல் தட்டுப்பட்டுள்ளது. உடனே அவர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வந்து சிவராஜன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.





0 Comments: