Headlines
Loading...
கொட்டில்பாட்டில் கடல் அலையில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

கொட்டில்பாட்டில் கடல் அலையில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

கொட்டில்பாட்டில் கடல் அலையில் சிக்கி 4 வயது சிறுவன் பலி
27-06-2015
கொட்டில்பாட்டைச் சேர்ந்தவர் மரியஜேம்ஸ். இவரது மனைவி பனிமேரி. இவர்களுக்கு செரின் அபிஷேக் (வயது 4) உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் இன்று காலை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அபிஷேக்கின் உடலை பார்த்து கதறி
அழும் உறவினர்கள்
அப்போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தில் செரின் அபிஷேக் சிக்கினான். அவனை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த மற்ற குழந்தைகள் சத்தம் போட்டு அலறின. உடனே அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் அலை செரின் அபிஷேக்கை இழுத்துச்சென்றது. அவனை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் செரின் அபிஷேக் பிணமாக கரை ஒதுங்கினான்.

மகன் இறந்ததால் தாயார் பனிமேரியும், உறவினர்களும் கதறி அழுதனர். மரியஜேம்சுக்கு பனிமேரி 2–வது மனைவி ஆவார். அவரது முதல் மனைவியும், 3 குழந்தைகளும் சுனாமியில் சிக்கி பலியானார்கள். அதன்பிறகே பனிமேரியை மரியஜேம்ஸ் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: