
Manavai News
மணவாளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி
மணவாளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி
07-04-2015
மணவாளக்குறிச்சியில் அட்மா பண்ணைப்பள்ளி விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் குருந்தன்கோடு வட்டாரத்தை சேர்ந்த 25 விவசாயிகள் கலந்து கொண்டனர். உளுந்து பயிரில் விதைப்பு முதல் அறுவடை வரையில் பல்வேறு பருவங்கள் தொடர்பாக பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு குருந்தன்கோடு வட்டார அட்மா தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
குருந்தன்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாலசந்தர், திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் மைய உதவி பேராசிரியர் யமுனா ராணி, குருந்தன்கோடு பகுதி வேளாண்மை அலுவலர் சந்திரபோஸ் ஆகியோர் உளுந்து பயிர் சாகுபடி குறித்து பேசினர். முடிவில் அட்மா வட்டார மேலாளர் அலெக்ஸ் நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பிரபாகரன் செய்து இருந்தார்.
0 Comments: