
Manavai News
மணவாளக்குறிச்சியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சி வகுப்பு
மணவாளக்குறிச்சியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சி வகுப்பு
06-04-2015
மணவாளக்குறிச்சியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான டிஜிட்டல் கல்வியறிவு குறித்த பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த வகுப்புகள் மணவாளக்குறிச்சி ராபி ஏஜென்சீஸ் பொது சேவை மையத்தில் வைத்து நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்பு குருந்தன்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்காக நடத்தப்படுகிறது.
பயிற்சி வகுப்பை குருந்தன்கோடு வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ஹெலன் ரோஸ் தொடங்கி வைத்தார். மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா, பயிற்சி நிலைய நிறுவனர் முஹம்மது ராபி ஆகியோர் பயிற்சியின் சிறப்பு குறித்து பேசினர். பயிற்சியில் கணினி உபயோகித்தல் உள்பட பல பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் குருந்தன்கோடு ஒன்றியத்தை சேர்ந்த 143 பேர் பயன்பெறுகின்றனர். இந்த பயிற்சிகளை கணினி ஆசிரியர் எம்மெஸ் சலீம் வழங்கி வருகிறார்.
0 Comments: