
Manavai News
மணவாளக்குறிச்சி அருகே வாலிபர் மீது தாக்குதல்: அண்ணன்-தம்பி மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே வாலிபர் மீது தாக்குதல்: அண்ணன்-தம்பி மீது வழக்கு
11-04-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கலுப்படி வண்ணான்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன்கள் விஜயகுமார் (வயது 26) மற்றும் பால்ராஜ் (22) ஆகியோர் மாங்காய் பறித்ததாக கூறப்படுகிறது. இதனை தங்கராஜின் மனைவி கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு வந்த தங்கராஜின் மகன் சுனில் (25) இதனை தட்டிக்கேட்டுள்ளார். உடனே பால்ராஜ் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து சுனிலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுனில் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விஜயகுமார், பால்ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: