
சுற்றுவட்டார செய்திகள்
நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா 27- ம் தேதி தொடங்குகிறது
நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா 27- ம் தேதி தொடங்குகிறது
23-03-2015
மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் இந்து சமய மாநாடு வருகிற 27- ம் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடக்கிறது. 27- ம் தேதி காலை 4 மணிக்கு நடைதிறப்புக்கு பின்னர், நிர்மால்யம், அபிஷேகம், மலர் நிவேத்தியம், தீபாராதனை நடக்கிறது. 11 மணிக்கு சிவசக்தி அம்மனுக்கு கலசபூஜை, அலங்கார பூஜையும், பின்னர் அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதனை ரமணி கண்ணன் தொடங்கி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு மகளிர் மாநாடு நடக்கிறது.
மாநாட்டுக்கு பருத்திவிளை சமயவகுப்பு ஆசிரியை ராணிஜெயந்தி ராஜகோபால் தலைமை தாங்குகிறார். சபரி மணிலா சிறப்புரையாற்றுகிறார். பின்னர் இசை பட்டிமன்றமும், பல்சுவை பட்டிமன்றமும் நடக்கிறது. 28- ம் தேதி காலையில் திருப்பள்ளி உணர்த்தல், பஜனை, திருவாசகம் முற்றோதல், அன்னதானம் ஆகியன நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு அகில திரட்டு விளக்க உரையும், இரவு திரைஇசை பட்டிமன்றமும் நடக்கிறது.
29- ம் தேதி காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களின் பேச்சு, பாட்டு போட்டிகள் நடக்கிறது. மதியம் அன்னதானமும், இரவு சமயமாநாடும், பின்னர் நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடக்கிறது. 30- ம் தேதி காலை 9.30 மணிக்கு குலை வாழைகளுக்கு நேரியல் போடுதலும், மதியம் 2 மணிக்கு கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கலில் இருந்து 5 யானைகள் மீது சந்தன குடம் பவனி வருதலும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகமும், சிறப்பு அன்னதானமும், இரவு நாடகமும் நடக்கிறது. 31- ம் தேதி காலையில் கடலுக்கு சென்று புனிதநீர் கொண்டு வருதலும், சிறப்பு வழிபாடு, அன்னதானமும், சத்சங்கமும், மாலை 3 மணிக்கு வழக்காடு மன்றமும், 6.30 மணிக்கு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்குதலும் நடக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், சிவராஜ், சடையன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இரவு 1 மணிக்கு கொடை விழாவும், அதிகாலை 3 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
0 Comments: