
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் தவறி விழுந்த பெண் சாவு
மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் தவறி விழுந்த பெண் சாவு
19-03-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள நடுவூர்கரை பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சிறுவயது முதலே மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இவர் தினமும் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியகுளம் இசக்கியம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையிலும் கோவிலுக்கு சென்றார். அங்கு குளத்தில் கால் நனைக்கும் போது, எதிர்பாராத விதமாக கால் தவறி குளத்தில் விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் சுந்தர்ராஜ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 Comments: