
Manavai News
மணவாளக்குறிச்சியில் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
மணவாளக்குறிச்சியில் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
23-03-2015
மணவாளக்குறிச்சியில் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கழக பொருளாளர் ஸ்டாலின் 63-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான என்.சுரேஷ்ராஜன் சிறப்புரை வழங்கினார். பேரூர் அவைத்தலைவர் செல்லப்பன் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ததேயூஸ், ஒன்றிய துணை செயலாளர் விஜயகுமார், லூயிஸ் மேரி, ராதா கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் ரெத்தினகுமார், ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகளான ரவிசந்திரன், தேவதாஸ், தேவராஜ், மணவை பேரூர் பிரதிநிதிகளான இஸ்தோர், செல்வகுமார், முகமது முபீன், வின்சென்ட்ராஜா, இம்மானுவேல், லீனஸ் நிஜாம் இளம்பிறை ஷேக், செந்தில் குமார், ரெஜி, ஸ்ரீகாந்த் உள்பட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments: