
Manavai News
மணவாளக்குறிச்சியில் சிபிஐ(எம்) நடத்திய மக்களின் வாழ்வுரிமை போராட்டம், பாதயாத்திரை நடந்தது
மணவாளக்குறிச்சியில் சிபிஐ(எம்) நடத்திய மக்களின் வாழ்வுரிமை போராட்டம், பாதயாத்திரை நடந்தது
31-03-2015
சிபிஐ(எம்) குமரி மாவட்ட மக்களின் வாழ்வுரிமை போராட்டம் ஏப்ரல் 6-ம் தேதி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவகலம் முன் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் தலைமையில் கன்னியாகுமரி முதல் குளச்சல் வரை மாபெரும் பாதயாத்திரை நடைபெற்றது. 29-ம் தேதி பாதயாத்திரை குளச்சலில் நிறைவுற்றது.
அன்று மணவாளக்குறிச்சி வழியாக சென்ற பாதயாத்திரையினர், பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது, மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள இந்திய அரிய மணல் ஆலையை விரிவாக்கம் செய்திடவும், கடற்கரை மேலாண்மை சட்டத்தை கைவிடவும், ஆறு மற்றும் குளங்களை தூர்வாரி பாதுகாத்திட வலியுறுத்தியும் பேசப்பட்டது.
மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தினை, பேரூர் கிளை சிபிஐ(எம்) கட்சியினர் செய்திருந்தனர்.
போட்டோஸ்
புதியபுயல் முருகன்
மணவாளக்குறிச்சி
0 Comments: