
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் மீனவர்கள் வலையில் 12 அடி நீள ராட்சத சுறா மீன் சிக்கியது
குளச்சல் மீனவர்கள் வலையில் 12 அடி நீள ராட்சத சுறா மீன் சிக்கியது
31-03-2015
குளச்சலில் சுமார் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். ஆழ்கடலில் 10 முதல் 12 நாட்கள் வரை தங்கியிருந்து மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். தற்போது குளச்சல் மீனவர்கள் வலையில் தேரை, நாககண்டம், நவரை போன்ற மீன்களும், சிறிய சுறாக்களும் அதிகளவில் சிக்கி வருகிறது.
இந்நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் விசைப்படகில் இன்று காலை குளச்சல் திரும்பினர். அந்த படகில் 12 அடி நீளமும், 500 கிலோ எடையும் கொண்ட ராட்சத சுறா மீன் சிக்கியிருந்தது.
நடுக்கடலில் மீனவர்கள் விரித்த வலையில் இந்த மீன் சிக்கியது. அந்த படகில் இருந்த மீனவர்களால் சுறா மீனை தூக்கி படகில் போடமுடியவில்லை. இதனால் மற்றொரு படகில் வந்த மீனவர்கள் உதவியுடன் மீனை தூக்கிப்போட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த மீனை கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
0 Comments: