
Manavai News
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் கிடந்த 4 சுவாமி சிலைகள் மீட்பு: தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் கிடந்த 4 சுவாமி சிலைகள் மீட்பு: தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு
30-03-2015
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் நேற்று முன்தினம் மாலையில் வாலிபர்கள் சிலர் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு வாலிபரின் காலில் ஏதோ தட்டுப்பட்டது. உடனே அவர், இதுபற்றி மற்ற வாலிபர்களிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கடலில் மூழ்கி தட்டுப்பட்டதை மேலே எடுத்து பார்த்தனர். அப்போது தான் அது சுவாமி சிலை என்பது தெரிய வந்தது.
![]() |
மீட்கப்பட்ட சிலைகள் |
இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் வாலிபர்களின் உதவியுடன் கடலில் மேலும் சிலை கிடக்கிறதா என்று 2 மணி நேரம் தேடி பார்த்து எடுத்தனர். கடலில் இருந்து மொத்தம் 4 சுவாமி சிலைகளும், ஒரு பீடத்தையும் தூக்கி கரைக்கு கொண்டு வந்தனர். அவற்றில் விநாயகர் சிலை 1½ அடி உயரமும், 3 அம்மன் சிலைகளும் தலா 2½ அடி உயரமும் இருந்தன.
அவற்றை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சுவாமி சிலைகளை கடலில் போட்டு சென்றது யார் என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் 4 சுவாமி சிலைகள் மற்றும் பீடத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
0 Comments: