
Manavai News
மணவாளக்குறிச்சி மணல் ஆலை சார்பில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா
மணவாளக்குறிச்சி மணல் ஆலை சார்பில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா
30-03-2015
மணவாளக்குறிச்சி மணல் ஆலை சார்பில் பல்வேறு வளர்ச்சி மற்றும் நல திட்ட உதவிகள் சுற்றுவட்டார பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளுக்கு, தண்ணீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா மணல் ஆலை வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மணல் ஆலை தலைமை பொது மேலாளரும், ஆலை தலைவருமான மஹாபத்ரா தலைமை தாங்கி, தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை வழங்கினார். இதில் மேலாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: