
Manavai News
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வியாபாரியிடம் 35 பவுன் நகை திருட்டு?
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வியாபாரியிடம் 35 பவுன் நகை திருட்டு?
28-03-2015
மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் செய்யது அலி (வயது 44). இவர் பேன்சி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 23–ம் தேதி இவர் வீட்டில் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே செய்யது அலி வீட்டில் இருந்த 35 பவுன் நகையை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாக தெரிகிறது.
பின்னர் அம்மாண்டிவிளை சென்ற செய்யது அலி அங்கு டாஸ்மாக் பாருக்கு சென்று மது அருந்தி உள்ளார். பின்னர் கல்லுக்கட்டியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மது அருந்தி உள்ளார். அப்போது தன்னிடம் இருந்த நகை பை காணாமல் போனதை அறிந்து மனமுடைந்து செய்யது அலி தூத்துக்குடி சென்றார்.
நகை காணாமல் போனது பற்றி உறவினர்களிடம் போன் மூலம் தகவல் கூறிய செய்யது அலி நேற்று வீடு திரும்பினார். பின்னர் இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிவு செய்தார். டாஸ்மாக் பாரில் மது அருந்தும் போது செய்யது அலியிடம் இருந்த நகையை மர்மநபர்கள் திருடி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments: