
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது
10-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 9-ம் நாள் திருவிழா நேற்று பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது. கோவில் நிகழ்ச்சியில் நேற்று காலை 4.30 திருநடை திறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், காலை 9.30 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், பகல் 1 உச்சிகால பூஜையும் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும் நடைபெற்றது.

சமய மாநாட்டு பந்தலில் காலை 7 மணிக்கு மஹாபாரத தொடர் விளக்க உரையும், காலை 9 மணிக்கு ஈத்தாமொழி திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் சிந்தனை சொல்லரங்கமும், பிற்பகல் 2 மணிக்கு பக்தி இன்னிசையும், மாலை 4 மணிக்கு செதுவூர் நாஞ்சில் சகாதேவன் குழுவினரின் வில்லிசை கச்சேரியும், மாலை 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு குமரி ரெத்ன பிரியா பக்தி இன்னிசை குழு வழங்கிய இன்னிசை பாட்டு மன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
0 Comments: