
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 8-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 8-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
09-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 8-ம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 4.30 திருநடை திறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பகல் 1 உச்சிகால பூஜையும் நடைபெற்றது.
மாலையில் அம்மாண்டிவிளை விநாயகர் கோவிலில் இருந்து சந்தன குடங்களுடன் யானை ஊர்வலமும், மங்காரத்தில் இருந்து சந்தன குடங்களுடன் யானை ஊர்வலமும், புறப்பட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடைபெற்றது.

சமய மாநாட்டு பந்தலில் காலை 7 மணிக்கு ஸ்ரீமத் பகவத் கீதை பாராயணமும், காலை 9 மணிக்கு சொற்பொழிவு போட்டியும், பிற்பகல் 3 மணிக்கு கீதை காட்டும் பாதை என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வும், மாலை 4 மணிக்கு நாயன்மார்கள் நாட்டிய நாடகம் பரத நாட்டியம் ஆன்மீக சொற்பொழிவும், மாலை 7 மணிக்கு ஆன்மிக உரையும், இரவு 8 மணிக்கு அகில திரட்டு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சமய மாநாடும், இரவு 11 மணிக்கு பக்தி இன்னிசையும் நடைபெற்றது.
0 Comments: