
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 7-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 7-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
08-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 7-ம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 4.30 திருநடை திறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9.30 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பகல் 1 உச்சிகால பூஜையும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பாலப்பள்ளம் நடுப்பிடாகை அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சந்தன குடங்களுடன் யானை ஊர்வலமும், உடையார்விளை செம்மண்குளம் இசக்கியம்மன் கோவிலில் இருந்து சந்தன குடங்களுடன் யானை ஊர்வலமும், உடையார்விளை கொப்பினான்விளை பிரம்ம காளியம்மன் கோவிலில் இருந்து சந்தன குடங்களுடன் யானை ஊர்வலமும் புறப்பட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடைபெற்றது.

சமய மாநாட்டு பந்தலில் காலை 7 மணிக்கு ஸ்ரீமத் பகவத் கீதை பாராயணமும், காலை 9 மணிக்கு சொற்பொழிவு போட்டியும், பிற்பகல் 3 மணிக்கு சங்கத்தில் வருடாந்திர கூட்டமும், மாலை 4 மணிக்கு கொல்லங்கோடு ஊரம்பு நாட்டியாஞ்சலி நாட்டியப்பள்ளி வழங்கிய நிர்த்த நிர்த்தியங்கள் எனும் பரதநாட்டியம், குச்சிபுடி, மோகினியாட்டம், நாடோடி நடனம் ஆகிய நடைபெற்றன. மாலை 6 மணிக்கு ஆன்மிக உரையும், இரவு 8 மணிக்கு மாதர் மாநாடும், இரவு 10 மணிக்கு பக்தி இன்னிசை மற்றும் கோலாட்டமும், தொடர்ந்து திப்பிறமலை கேஜியின் சங்கீதபிரியா ஆர்ட்ஸ் சார்பில் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
0 Comments: