
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 3006 திருவிளக்கு பூஜை நடந்தது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 3006 திருவிளக்கு பூஜை நடந்தது
02-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா நேற்று தொடங்கியது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 3006 திருவிளக்கு பூஜையும், ஸ்ரீராஜராஜேஸ்வரி பூஜையும் நடந்தது.
திருவிளக்கு பூஜையை சாரதா நடராஜன் துவங்கி வைத்தார். நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஆகியோர் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர்.

இரவு 8 மணிக்கு இலட்சுமிபுரம் பிரியதர்ஷினி நாட்டியப்பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு சௌபர்னிகா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.
0 Comments: