
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் துறைமுகம் 2016–ல் செயல்பட தொடங்கும்: மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
குளச்சல் துறைமுகம் 2016–ல் செயல்பட தொடங்கும்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
01-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி நடந்த சமய மாநாட்டில் பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றினார். மாநாட்டில் பங்கேற்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
குளச்சல் துறைமுகம் 2016–ல் செயல்பட தொடங்கும். குமரி மாவட்டம் இந்தியாவின் முதல்நிலை மாவட்டமாக மாற மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் இங்கு குவிய வேண்டும். இந்து சமய மாநாட்டிற்கு எனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கி உள்ளேன்.
ஆனால் அதை பயன்படுத்தி இங்கு மாநாட்டு அரங்க கட்டிடம் கட்டக்கூடாது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். மாநில அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த கோவில் 6–ம் திருவிழா முதல் ஒரு வழிப்பாதையை புதியதாக செயல்படுத்த போகிறார்கள். இதுவரை ஒரு வழி பாதை செயல்படுத்தப்பட்டதில்லை. இதுபற்றி பேரூராட்சி தலைவிக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை.
மண்டைக்காடு கோவிலுக்கு கேரள பக்தர்கள் திரளானோர் இருமுடி கட்டி வருவார்கள். அவர்கள் ஒரு வழிப்பாதை திட்டத்தால் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்படும். எனவே ஒரு வழிப்பாதையை அமல் படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். அப்போதுதான் குமரி மாவட்டம் சுற்றுலாவில் வளர்ச்சி பெறும். மேலும் விமான நிலையமும் இங்கு வரும். இதன் மூலம் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றார்.
0 Comments: