
Manavai News
மணவாளக்குறிச்சியில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது
மணவாளக்குறிச்சியில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது
25-02-2015
அதிமுக பொதுசெயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மணவாளக்குறிச்சி, ஆசாரிதெருவில் உள்ள பட்டாணி சாஹிப் தர்ஹாவில் வைத்து பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அசோக் குமார் கலந்து கொண்டு வேட்டி-சேலைகளை வழங்கினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி இரோனிமூஸ், கூட்டுறவு சங்க தலைவர் பஷீர், பேரூர் அம்மா பேரவை பாலகிருஷ்ணன், ஒன்றிய கழக துணைத்தலைவர் ராமசந்திரன், கிளை செயலாளர் ரமேஷ், கவுன்சிலர் அப்துல் சலாம் ராமசுவாமி, சகாயராஜன், மைக்கேல்ராஜ், ஜெரால்டு, சின்னவிலை அதிமுக மூத்த உறுப்பினர் கிளைமண்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோ
“புதியபுயல்” முருகன்
மணவாளக்குறிச்சி
0 Comments: