
Manavai News
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு 26-ம் வருட காவடி பவனி: பக்தர்கள் விரதம் இருந்தனர்
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு 26-ம் வருட காவடி பவனி: பக்தர்கள் விரதம் இருந்தனர்
17-02-2015
மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை பக்தர்கள் குழு நடத்தும் 26-வது வருட காவடி பவனி விழா நிகழ்ச்சி வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் விரதம் ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கினர்.
22-ம் தேதி அன்று காலை 5 மணிக்கு கண்ணன் போற்றி நடத்தும் கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு தீபாராதனை, மாலை 4 மணிக்கு நாதஸ்வர நையாண்டி மேளம், மாலை 6 மணிக்கு வேல்தரித்தல், இரவு 7.15 மணிக்கு மாதவிளை கவியரசு கண்ணதாசன் கலை மன்றம் வழக்கும் வழக்காய்வு மன்றம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.
23-ம் தேதி நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு பக்தி கானம், 6.30 மணிக்கு காவடி பவனி வருதல் நிகழ்ச்சியை மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன்ஜி தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார். பின்னர் காவடி பவனி மணவாளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பவனி வருகிறது. மதியம் 1 மணிக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு காவடி பவனி திருச்செந்தூருக்கு செல்கிறது.
3 அடி வேல் காவடி செல்வபிரகாஷ், புஷ்பகாவடி பிரதீப், சிவா, ராம்கி, புவனேஷ், கார்த்திக், பிரசாந்த், சேகர் ஆகியோர் எடுக்கின்றனர். நிகழ்ச்சிக் ஏற்பாடுகளை செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை பக்தர்கள் குழு செய்துள்ளது.
0 Comments: