
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு இருமுடி கட்டுடன் பெண்கள் வருகை அதிகரிப்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு இருமுடி கட்டுடன் பெண்கள் வருகை அதிகரிப்பு
25-02-2015
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் திருவிழா வருகிற 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
திருவிழா தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் இருந்து சுற்றுலா வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி, அம்மனுக்கு பொங்கலிட்டு தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். மேலும் நேற்று கேரளாவில் இருந்து இருமுடி கட்டுடன் ஏராளமான பெண் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
6-ம் தேதி அன்று வலியபடுக்கை என்ற மகாபூஜையும், 9-ம் தேதி அன்று இரவு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், 10-ம் திருவிழா அன்று நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 Comments: