
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சண்டிகா ஹோம பூஜை: ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சர் ஆகவேண்டி நடந்தது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சண்டிகா ஹோம பூஜை: ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சர் ஆகவேண்டி நடந்தது
25-02-2015
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டியும், அவர் பிறந்த நாளை முன்னிட்டும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சண்டிகா ஹோம பூஜை நடந்தது. காலையில் கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும், சுதர்சன ஹோமமும், மிருக்துஞ்ஜெய ஹோமமும், மகாலெட்சுமி ஹோமமும், சண்டிகா ஹோமமும் நடந்தது.
நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் சிவகுற்றாலம், பேரவை செயலாளர் சேவியர் மனோகரன், முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், ஒன்றிய தலைவர் அசோக்குமார், ஒன்றிய பேரவை செயலாளர் வேல்தாஸ், எரோணிமூஸ், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் லாரன்ஸ், செல்வகுமார், அருள்தாஸ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்.
0 Comments: