
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
13-02-2015
மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளியின் 65–வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பள்ளி செயலர் ரா.ஞானசேகர் வாழ்த்திப்பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.கே.மணிகண்டன், துணைத்தலைவர் ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற அர்ச்சனா எஸ்.ராஜரெத்தினம் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்னுலிங்கம் சிறப்புரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜதுரை ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், சர்விசிக்ஷா அபியான் உறுப்பினர்கள் கல்யாணகுமார், சுந்தர், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சி.அழகேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் வினோத் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சிவகுமாரி, பத்மகுமாரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
0 Comments: