
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கண்டக்டர் சாவு வேலைக்கு சென்ற போது பரிதாபம்
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கண்டக்டர் சாவு வேலைக்கு சென்ற போது பரிதாபம்
23-02-2015
கருங்கல் மூசாரி பகுதியை சேர்ந்தவர் வரதன் (வயது 56). அரசு பஸ் கண்டக்டர். இவர் குளச்சல் அரசு பஸ் டெப்போவில் இருந்து நாகர்கோவில் வழியாக நெல்லைக்கு செல்லும் என்ட் டூ என்ட் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றினார்.
இவர் கடந்த இருநாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக அதிகாலை 4.45 மணிக்கு கருங்கலில் இருந்து குளச்சல் டெப்போவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். குளச்சலை அடுத்த களிமார் பாலம் அருகே வந்த போது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வரதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் வரதனை மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து குளச்சல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இறந்து போன வரதனுக்கு, மேரி அல்போன்சாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகிவிட்டது.
வரதன் உடலுக்கு குளச்சல் அரசு பஸ் டெப்போ ஊழியர்கள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர்.
0 Comments: