
குமரிமாவட்ட செய்திகள்
குளச்சல் அருகே வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது: போலீஸ் விசாரணை
குளச்சல் அருகே வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது: போலீஸ் விசாரணை
25-02-2015
குளச்சல் லெட்சுமி புரத்தில் வசிப்பவர் சலாவுதீன் (வயது 38). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சலாவுதீன் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டு முன் ஆட்டோவை நிறுத்திவிட்டு, தூங்க சென்றார். நள்ளிரவு 11.45 மணி அளவில் வீடு அருகில் நிறுத்தியிருந்த ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதனால் சலாவுதீன் பதறியடித்துக்கொண்டு ஓடி, குடத்தில் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றி தீயை அணைத்தார். அதற்குள் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இதுபற்றி குளச்சல் போலீசில் சலாவுதீன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஆட்டோவில் எப்படி தீப்பிடித்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: