
குமரிமாவட்ட செய்திகள்
ரப்பர் மரக்கன்று தயாரிப்பில் புதிய முறை குமரி மாவட்ட விஞ்ஞானி அறிமுகப்படுத்தினார்
ரப்பர் மரக்கன்று தயாரிப்பில் புதிய முறை குமரி மாவட்ட விஞ்ஞானி அறிமுகப்படுத்தினார்
13-01-2015
குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. ரப்பர் மரக்கன்றுகளை தயாரிக்க தற்போது பாலித்தீன் கூடு மற்றும் ரூட் டிரெய்னர் என்கிற கப்புச்செடி முறைகள் உள்ளன. இந்த முறைகளில் உள்ள குறைபாடுகளை களைந்து புதிதாக ஒரு முறையை அரசு ரப்பர் தோட்ட கள அதிகாரியும், விஞ்ஞானியுமான பஞ்சலிங்கபுரம் முத்து அய்யப்பன் அறிமுகப்படுத்தியுள்ளார். டி.எஸ்.கப் என்ற அந்த புதிய முறையில் மரத்திலான அல்லது பிளாஸ்டிக் உருளைகளை அவர் பயன்படுத்துகிறார். அந்த உருளை பாதிப்பாதியாக இணைக்கும் வகையில் உள்ளது.
இந்த உருளையை தரைமேல் வைத்து உருளையின் உள்ளே மண்ணை போட்டு ரப்பர் விதைகளை நட்டால் குறிப்பிட்ட காலத்தில் கன்று வளர்ந்து விடுகிறது. அதைத்தொடர்ந்து உருளையை எடுத்து 2 செங்கல்களின் மீது வைக்க வேண்டும். உருளையின் அடிப்பாகம் தரையில் படக்கூடாது. இதனால் ரப்பர் கன்றின் ஆணிவேர் வெளியே வராது. அதே நேரத்தில் சல்லிவேர் அதிக பலத்துடன் வளரும்.
இதை அப்படியே எடுத்துச்சென்று தோட்டத்தில் வைத்து, மரக்கன்றுக்கு சேதம் இன்றி உருளையை பிரித்து விடலாம். இந்த முறையை பிற தோட்டப்பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதன்மூலம் சேதம் குறைகிறது. இந்த புதிய முறையை அறிமுகப்படுத்திய விஞ்ஞானி முத்து அய்யப்பனை அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் கயரத் மோகன்தாஸ் மற்றும் பலர் பாராட்டினர்.
0 Comments: