
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சலில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி
குளச்சலில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி
13-01-2015
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், போக்குவரத்து பிரிவு போலீசார் சார்பில், குளச்சலில் 26-வது சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட மாணவர்களின் பேரணியை, போலீஸ் உதவி சூப்பிரண்டு கங்காதர் தொடங்கி வைத்தார்.
இதில் மாணவ-மாணவிகள் விபத்தில்லா பயணம் குறித்த, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்திச்சென்றனர். இந்த பேரணி அண்ணாசிலை சந்திப்பு வழியாக சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், பள்ளியின் என்.சி.சி. அலுவலர் தங்கசுவாமி, ஆசிரியர்கள், போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: