
Manavai News
மணவாளக்குறிச்சி – திங்கள்நகர் இடையே ரூ.2 கோடி செலவில் சாலைப்பணி: பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வு
மணவாளக்குறிச்சி – திங்கள்நகர் இடையே ரூ.2 கோடி செலவில் சாலைப்பணி: பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வு
13-01-2015
மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கள் நகர் செல்லும் சாலை, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்தது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 8-ம் தேதி முதல் காங்கிரஸ் சார்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 4 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தின் போது, தக்கலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மலர்விழி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பணி தொடங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து முதல் கட்டப்பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “முதல் கட்ட பணிகள் முடிந்த பின் இறுதிக்கட்ட பணிகள் உடனே தொடங்கப்படும், அதற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும்“ என்று கூறினார்.
ஆய்வின் போது இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட துணைத்தலைவர் லாரன்ஸ், குளச்சல் தொகுதி தலைவர் சுமன், திங்கள்நகர் பேரூர் தலைவர் ஜெமினிஷ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பேரூர் தலைவர் சுலைமான், பேரூர் காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன், ஐ.என்.டி.யு.சி தலைவர் தேவதாசன், மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: