
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிச்சந்தை அருகே மயங்கி விழுந்த முதியவர் சாவு
வெள்ளிச்சந்தை அருகே மயங்கி விழுந்த முதியவர் சாவு
13-01-2015
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியை சேர்ந்தவர் பெரியமுத்து (வயது 72). இவர் மேலசங்கரன்குழி ஊராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும், தனது மகன் மூக்கன் (40) என்பவரை பார்ப்பதற்காக பேயோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்களை அவரை மீட்டு ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து மூக்கன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: