
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி
மண்டைக்காடு பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி
13-01-2015
மண்டைக்காடு பேரூராட்சியில் பொங்கலையொட்டி பிளாஸ்டிக், பழைய துணிகளை எரித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, புகையில்லா பொங்கல் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி கூட்டு மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி முன் இருந்து தொடங்கியது.
பேரணியில் பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், செயல் அலுவலர் ஜெயராஜ், துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார், வார்டு உறுப்பினர்கள் கமலா, கல்யாணகுமார்மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஏசுதாஸ், மாணவ- மாணவிகள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். பேரணி மணலிவிளை, புதுத்தெரு, மண்டைக்காடு சந்திப்பு உள்பட பலவேறு பகுதிகளுக்கு சென்றது.
0 Comments: