
Manavai News
மணவாளக்குறிச்சி ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
மணவாளக்குறிச்சி ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
13-01-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மறுகால்விளை பெரிய குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25), ஆட்டோ டிரைவர். மணவாளக்குறிச்சி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் பாட்டிஇறந்து விட்டதால், கண்ணன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் துணியை மாட்டி கண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீசில் கண்ணன் தம்பி மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்தார். கண்ணன் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: