
சுற்றுவட்டார செய்திகள்
கடியபட்டணம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா: திரளானவர்கள் பங்கேற்பு
கடியபட்டணம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா: திரளானவர்கள் பங்கேற்பு
13-01-2015
கடியபட்டணத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 30-ம் தேதி தொடங்கி நேற்று வரை 13 நாட்கள் நடந்தது. விழாவின் முதல் நாளில் ஆலய அர்ச்சிப்பு மற்றும் திருக்கொடியேற்ற திருப்பலியை கோட்டார் ஆயர் பீட்டர்ரெமிஜியுஸ் தலைமை தாங்கி நடத்தினார். முன்னதாக குறும்பனை ஆலய வளாகத்தில் இருந்து ஜோதி ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை மற்றும் திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
8-வது நாள் திருவிழாவில் மதுரை உயர்மறை மாவட்ட ஆயர் ஆன்டனி பாப்புசாமி கலந்து கொண்டு திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். அன்று பகல் சமபந்தி விருந்தும், இரவு மேஜிக் ஷோவும் நடந்தது. 12-வது திருவிழாவன்று மாலை மறை மாவட்ட முதன்மை செயலாளர் பெலிக்ஸ் தலைமையில் ஜெபமாலை, சிறப்பு நற்கருணை ஆசிர் நடந்தது. கோட்டாறு சமூக சேவை நிறுவன இயக்குனர் மரியசூசை மறையுரையாற்றினார். இரவு வாணவேடிக்கை நடந்தது.
13-வது நாள் திருவிழா காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் ஜூகு பால்ராஜ் திருவிழா திருப்பலியை தலைமை தாங்கி நடத்தி, மறையுரையாற்றினார். இரவு 9 மணிக்கு சென்னை லெட்சுமண் சுருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில் பங்கு மக்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டை பங்கு தந்தை செல்வராஜ், இணை பங்கு தந்தை ராய், பங்குமக்கள், பங்கு பேரவை, அருட் சகோதரிகள், பங்கு தந்தையர்கள் செய்து இருந்தனர்.
0 Comments: