சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஜெயலலிதா விடுதலைக்காக அதிமுக சார்பில் இருமுடி கட்டி வழிபட்ட பெண்கள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஜெயலலிதா விடுதலைக்காக அதிமுக சார்பில் இருமுடி கட்டி வழிபட்ட பெண்கள்
13-10-2014
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுதலை கிடைக்க வேண்டி பால்குளம் கண்டன்சாஸ்தா கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு அதிமுக சார்பில் பெண்கள் இருமுடி கட்டி சென்று வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் மனைவி செல்வழகி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாமணி உள்பட பல பெண்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்தனர். இதில் அதிமுகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: