சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு கோவிலில் அதிமுகவினர் வழிபாடு
மண்டைக்காடு கோவிலில் அதிமுகவினர் வழிபாடு
06-10-2014
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும், அவர் விடுதலைக்காக வேண்டியும் அதிமுக சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பிளிகலா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைசெயலாளர் திலக், ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் செல்வகுமார், பேரூர் செயலாளர் விஜயகுமார், சிதம்பரதாஸ், ஸ்டான்லி, செல்லத்துரை, நேசமணி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: