
Events
Manavai News
மணவாளக்குறிச்சியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன
மணவாளக்குறிச்சியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன
06-09-2014
விநாயகர் சதூர்த்தி விழா கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதி, புதுக்கடைதெரு, வடக்கன்பாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் இன்று மாலையில் கடலில் கரைக்கப்பட்டன.
இன்று காலையில் இருந்து மணவாளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விநாயகர் சிலைகள், மணவாளக்குறிச்சி, தருவை, பிள்ளையார்கோவில், படர்நிலம், பரப்பற்று, சக்கப்பற்று, வடக்கன்பாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் வடக்கன்பாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்வை பா.ஜனதா மூத்தத்தலைவர் எம்.ஆர்.காந்தி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் செல்லன், மிசா சோமன், பா.ஜனதா மாவட்ட இணை செயலாளர் பிரபு, அட்வகேட் மணிகண்டன், இளைஞர் அணி துணைத்தலைவர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![]() |
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜனதா மூத்தத்தலைவர் எம்.ஆர்.காந்தி, மிசா சோமன், கண்ணன், ஐயப்பன் |
![]() |
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் எம்.ஆர்.காந்தி பேசிய காட்சி |
முருகன் (மணவை இன்ஃபோ சிறப்பு ஆசிரியர்)
மணவாளக்குறிச்சி
0 Comments: