
Manavai News
மணவாளக்குறிச்சி – திங்கள்நகர் சாலையை செப்பனிடக்கோரி ஆர்ப்பாட்டம்: பிரின்ஸ் எம்.எ.ல்ஏ. அறிவிப்பு
மணவாளக்குறிச்சி – திங்கள்நகர் சாலையை செப்பனிடக்கோரி ஆர்ப்பாட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
02-09-2014
![]() |
Prince MLA |
மணவாளக்குறிச்சி, திங்கள்நகர் இடையிலான சாலையை செப்பனிட கோரி வருகிற 5–ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மணவாளக்குறிச்சி - திங்கள்நகர் சாலை செப்பனியிடபட்ட பிறகு ஒருசில நாட்களில் மீண்டும் சேதமானதற்கு தரமற்ற முறையில் சாலை போடப்பட்டதே காரணம் ஆகும். இந்த வழித்தடத்தில் உள்ள மாணவர்கள், தொழிலாளர்கள், பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு இச்சாலையை செப்பனிட்டவர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூலிப்ப தோடு போர்க்கால அடிப்படையில் மீண்டும் செப்பனிடக்கேட்டு வருகிற 5–ம் தேதி பொதுமக்களை திரட்டி திங்கள்நகர் மார்க்கெட் அருகில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments: