
Manavai News
மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
15-08-2014
மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 9.30 மணிக்கு நடைபெற்ற விழாவில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவரும் கல்விக்குழு தலைவருமான ஜோஸ்பின் ரீட்டா தேசிய கொடியேற்றினார். பாபுஜி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் சுகுமாரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுதந்திர சிறப்பு குறித்து பேசினார்.
சுதந்திர தின சிறப்பு பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை பேரூராட்சி தலைவர் ஜோஸ்பின் ரீட்டா வழங்கினார். பள்ளி தலைமையாசிரியை லிற்றில் ஃப்ளவர், பள்ளி ஆசிரியைகள், மாணவ மானவிகளுன் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
போட்டோஸ்
புதியபுயல் முருகன்
0 Comments: