
Manavai News
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொடியேற்றம்
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொடியேற்றம்
15-08-2014
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் 68-வது சுதந்திர தினவிழா கொடியேற்றப்பட்டது. இன்று காலை 8.30 மணி அளவில் தலைமையாசிரியர் ஜாண் கிறிஸ்டோபர் பள்ளி மைதானத்தில் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை பள்ளியின் அதிகாரி ஜாண்சன் வழங்கினார்.
மேலும் பள்ளி வளாகத்தில் மரம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: