
Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபல ஆர்ட்டிஸ்ட் மரணம்
மரண அறிவிப்பு:
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபல ஆர்ட்டிஸ்ட் மரணம்
23-07-2014
மணவாளக்குறிச்சி, சக்கப்பத்து பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் ஆர்ட்டிஸ்டாக வேலைபார்த்து வந்தார். இவருடைய பல வண்ண சுவர் ஓவியங்கள் மணவாளக்குறிச்சி மற்றும் குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் அலங்கரித்துள்ளன.
இந்நிலையில் ஆர்ட்டிஸ்ட் குமார் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் நேற்று (22-07-2014) மதிய வேளையில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து மணவாளக்குறிச்சி பகுதி மக்கள் அவருக்கு அஞ்சலில் செலுத்தினர். அன்னாரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.
0 Comments: