
Manavai News
மணவாளக்குறிச்சியில் காங்கிரஸார் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
மணவாளக்குறிச்சியில் காங்கிரஸார் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
16-07-2014
மணவாளக்குறிச்சி சந்திப்பில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு குருந்தன்கோடு வட்டார தலைவர் சேவியர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். பேரூர் தலைவர் தனிஸ் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ் பங்கேற்று காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எட்வின்ஜோஸ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜாண்சவுந்தர், வட்டார தலைவர் முருகன், மண்டைக்காடு பேரூர் தலைவர் ஜெனித், மாவட்ட பொதுச்செயலாளர் எனல்ராஜ், வட்டார பொதுச்செயலாளர் குற்றாலம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சுந்தர்ராஜ், வட்டார செயலாளர் ஆல்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.
0 Comments: