
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சலில் காமராஜர் பிறந்தநாள் விழா
குளச்சலில் காமராஜர் பிறந்தநாள் விழா
16-07-2014
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா குளச்சல் காமராஜர் பஸ்நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது காமராஜர் முழு உருவ வெண்கலசிலை அமைப்பு குழுவினர் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கு முன்னாள் நகர்மன்ற தலைவரும், அமைப்பு குழு செயலாளருமான ஜேசையா தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் முனாப், யூசுப்கான், ஸ்டீபன், அந்திரியாஸ், ராஜேந்திரன், ஜாண், லதா மற்றும் செல்வின்குமார், ஜி.தாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குளச்சல் நகர பா.ஜனதா சார்பில் குளச்சல் பஸ்நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு நகர தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் நகர தலைவர் கணேசன், மாவட்ட இளைஞரணி பார்வையாளர் சதீஷ்பாரதி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பரமேஷ்வரன், நகராட்சி கவுன்சிலர் முருகன், சூர்யாமுருகன், ஜஸ்டின் செல்வகுமார், மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
0 Comments: