District News
நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பு பகுதியில் சிக்னலுக்கு காத்திருக்காத வகையில் போக்குவரத்து மாற்றம்
நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பு பகுதியில் சிக்னலுக்கு காத்திருக்காத வகையில் போக்குவரத்து மாற்றம்
10-06-2014
நாகர்கோவில் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் ஒருவழிப்பாதை திட்டத்தை அமல் படுத்தினர்.
இந்தநிலையில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் சிக்னல்கள் வைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தி, இன்னும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பி.டபிள்யூ.டி. ரோடு மற்றும் கோர்ட்டு ரோட்டில் இருந்து வேப்பமூடு சந்திப்பு வழியாக அண்ணா பஸ் நிலைய சாலையில் செல்லக்கூடிய பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை வேப்பமூடு சந்திப்பு அருகே உள்ள நகராட்சி பூங்காவில் இருந்து வலதுபுறமாக வந்து வேப்பமூடு பெட்ரோல் பங்கை ஒட்டியுள்ள சாலை வழியாக திருப்பி விடவும், மணிமேடை சந்திப்பில் இருந்து கோர்ட்டு ரோடு மற்றும் பி.டபிள்யூ.டி. ரோட்டுக்கு செல்லக்கூடிய வாகனங்களை வேப்பமூடு வந்ததும் காமராஜர் சிலையை சுற்றாமல், சிலைக்கு வலதுபுறமாக செல்லும் சாலையில் திருப்பி விடவும் போலீசாரால் திட்டமிடப்பட்டது. இதனால் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள சிக்னலுக்காக யாரும் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அங்கு சிக்னலை செயல்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது.
இதற்காக நாகர்கோவில் நகராட்சி பூங்காவுக்கு முன் இடதுபுறம் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் வேன் ஸ்டாண்ட் ஆகியவை எதிர்புறத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று காலை முதல் பரீட்சார்த்த முறையில் புதிய போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
0 Comments: