District News
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில் மைய புதிய கட்டிடப்பணி அமைச்சர் மோகன் ஆய்வு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில் மைய புதிய கட்டிடப்பணி அமைச்சர் மோகன் ஆய்வு
07-06-2014
தமிழக ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். அவருடன் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு கைத்திறன் மற்றும் தொழில் வளர்ச்சிக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஷீலாராணி சுங்கத், கைத்தறி, கைத்திறன், காதி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், உற்பத்தி மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் உடன் வந்தனர்.
பின்னர் அமைச்சர் மோகன் மற்றும் அதிகாரிகள் நாகர்கோவில் வந்தனர். அவர்கள், குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் நாகர்கோவில் கோணத்தில் ரூ.1½ கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டுமானப் பணியையும், அதே பகுதியில் ரூ.1¼ கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட தொழில் மைய கட்டிட கட்டுமானப் பணியையும் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு கோணத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கட்டுவதற்காக காண்பிக்கப்பட்ட இடத்தை அமைச்சர் மோகன் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி அண்ணா, மாநில மீனவர் இணைய கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ஞானசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், காரவிளை செல்வன், சந்திரன், வக்கீல் முருகேஷ்வரன், ஹேமந்த்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், வக்கீல் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: