Manavai News
மணவாளக்குறிச்சி அருகே மரத்தில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு
மணவாளக்குறிச்சி அருகே மரத்தில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு
20-05-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமம் கல்லடிவிளை. இந்த ஊரில் உள்ள ஒரு பெரிய பூவரசம் மரத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மலைப்பாம்பு கிளையில் சுருண்டு படுத்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கும், வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வன ஊழியர் சுந்தரதாஸ் அங்கு சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 7 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை அவர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
0 Comments: